• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கல்லூரியில்மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது– கமல்ஹாசன்

October 16, 2018 தண்டோரா குழு

கோவை அரசு கல்லூரியில்மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கதுஎன மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நான் கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களை நோக்கி செல்கிறேன். எனக்கென அரசியல் தலைவர்கள் மத்தியில் மதிப்புள்ளது. என்னை மதிக்க தவறுவது என்பது அவர்களின் பெருந்தன்மை இன்மையே காட்டுகிறது. போராட்டம் என்பது கனமான வார்த்தை, சட்ட ரீதியாக போராடுவோம்.கூட்டணி குறித்து நான் இப்போது முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு என்பது ஒன்று இருந்தே தீரும். ஊழல் செய்த கட்சியினருடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. ஊழல் யார் செய்தார்கள் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு பேரனை காரணம் சொல்ல முடியாது.நான் யாரையும் நம்பி இல்லை. மக்கள் என்னோடு இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கை நன்றாக நடக்கிறது. கோவை கல்லூரியில் பகவத்சிங் தொடர்பாக மாணவர்கள் கொண்டாட்டம் என்பது என்னை பொறுத்தவரை தவறானது அல்ல. மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அப்போது கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி. அவரின் கருக்கலைப்பு கருத்தை பெண்கள் பார்த்து வருகிறார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க