• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குளோபல் ஆர்ட் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி – 450 பள்ளி குழந்தைகள் பங்கேற்பு

July 22, 2024 தண்டோரா குழு

கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகள் நடைபெற்று வருகிறது
அதைத்தொடர்ந்து ஒண்பதாவது ஆண்டாக, பீளமேடு பகுதியில் உள்ள மணி மகால் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்ஜ் வுட்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் வித்யா பிரபா கலந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் குளோபல் ஆர்ட் தமிழ்நாடு தலைமை நிர்வாகி மங்கள் சாமி, மேற்கு மண்டல தலைமை நிர்வாகி சபரீஷ், மேலாளர் நம்ரதா,ஆகியோர் வரவேற்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்

இந்த ஓவியத் திறன் போட்டியில் கோவை, திருப்பூர் ஈரோடு சேலம் திருச்சி, நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி குழந்தைகள் சுமார் 450 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் பதனைந்து வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டஇந்த நிகழ்வில் “தண்ணீருக்கு கீழே நகரம் “எனும் ஓவிய தலைப்பு வழங்கப்பட்டது.இதில் தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக தீட்டி அனைவரையும் வியக்க வைத்தனர்.

இறுதியாக சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு குழந்தைகள் மாணவ, மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க