• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்த கேரளா வாலிபர் சுற்றி வளைத்து கைது

May 3, 2023 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே வெள்ளகிணர் பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)-ஐ வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த அகில் (26) என்பவரை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.16000 மதிப்புள்ள 6 கிராம் எடையுள்ள உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன்-ஐ பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை கோவை மாவட்ட போலீஸாரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 207 நபர்கள் மீது 510 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 433.131 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து சுமார் 23 கிராம் எடையுள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க