• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையர்கள் இருவர் கைது : 8 பவுன் நகை மீட்பு

May 9, 2023 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் அன்பு.இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர் மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் கடந்த 23.3.23 அன்று வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் பள்ளியில் இருந்து மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆசிரியை வீட்டில் நகை திருடியதாக ஒண்டிபுதூரை சேர்ந்த பிரகாஷ் (33), அன்னூரை சேர்ந்த பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸார் விசாரணையில், “கைதான கொள்ளையர்கள் மீது வழக்குகள் உள்ளன. மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து உயர்ரக பார்களுக்கு சென்று மிகவும் காஸ்டிலியான மது வகைகளை அருந்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர், ” என தெரியவந்தது.

மேலும் படிக்க