• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக PSG மருத்துவமனையில் அரிய கீஹோல் அறுவை சிகிச்சை சாதனை

May 31, 2026 தண்டோரா குழு

கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக, மிக அரிய மற்றும் சிக்கலான ஜீரண மண்டல மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சையை முழுமையான லாபரோஸ்கோபிக் (கீஹோல்) முறையில் வெற்றிகரமாக மேற்கொண்டு PSG IMSR & Hospitals மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.

PSG மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குடலியல் துறையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் எஸ் மற்றும் டாக்டர் எம்.சச்சின் கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழு இந்த உயர்நிலை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.23 வயதுடைய இளம் பெண் ஒருவர் தவறுதலாக Harpic ரசாயனத்தை அருந்தியதால்,உணவுக்குழாய் மற்றும் வயிற்று இணைப்பு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனால் உணவு விழுங்குவதில் சிரமம், அடிக்கடி வாந்தி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுக்குழாய் சுருங்குதல் போன்ற தீவிர பிரச்சினைகள் ஏற்பட்டன.

பலமுறை எண்டோஸ்கோபிக் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் நிலைமை சீராகாததால், மருத்துவர்கள் “Laparoscopic Right Colon Coloplasty” எனப்படும் அரிய மறுவடிவமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனர்.இதில் நோயாளியின் வலது பெருங்குடல் மற்றும் சிறுகுடலின் ஒரு பகுதியை பயன்படுத்தி புதிய உணவுக்குழாய் பாதை உருவாக்கப்பட்டது.

பொதுவாக திறந்த அறுவை சிகிச்சை முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை, இம்முறை மிகச் சிறிய துளைகள் வழியாக முழுமையாக கீஹோல் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சையின் போது முக்கிய இரத்த நாளங்கள் மற்றும் உறுப்பு பகுதிகளின் அருகே மிகுந்த துல்லியத்துடன் செயல்பட்டு, retro-mesenteric tunneling, substernal conduit உருவாக்கம், கழுத்துப் பகுதி உணவுக்குழாய் இணைப்பு உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல்துறை மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்ற நோயாளி, தற்போது திரவ மற்றும் மென்மையான உணவுகளை சிரமமின்றி உட்கொள்ளும் நிலைக்கு திரும்பியுள்ளார்.ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் பேச்சுப் பயிற்சி சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இந்த சாதனை,PSG IMSR & Hospitals மருத்துவமனையின் மேம்பட்ட குறைந்த காயச்சிகிச்சை திறனை வெளிப்படுத்துவதோடு,கடுமையான உணவுக்குழாய் பாதிப்பு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க