• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இருதய துடிப்பு கருத்தரங்கு’ வெற்றிகரமாக நிறைவு

May 25, 2026 தண்டோரா குழு

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல்,”கேஎம்சிஹெச் இருதய துடிப்பு கருத்தரங்கு 2026″ (KMCH Heart Rhythm Summit 2026) என்ற நிகழ்ச்சியைச் சேலத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

“இருதய துடிப்பு மருத்துவத்தின் புதிய பரிணாமம்” என்ற கருப்பொருளில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. இருதய துடிப்பு மேலாண்மை மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்களை விளக்குவதற்காகப் முன்னணி மருத்துவ வல்லுநர்கள் இதில் ஒன்றாகக் கூடினர்.

சிக்கலான மருத்துவ முறைகள் மற்றும் இருதய மருத்துவத்தின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உயர்தர கல்வி நிகழ்வாகவும் இந்த கருத்தரங்கு அமைந்தது. நாட்டின் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில், கொழுப்பைக் குறைத்தல், அளவுக்கு அதிகமாக இருதய தசை தடிப்பாவதற்கான (Hypertrophic Obstructive Cardiomyopathy) சிகிச்சை, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் சீரற்ற இருதய மேலறை துடிப்பை கட்டுப்படுத்துவது மற்றும் லீட்லெஸ் பேஸ்மேக்கர் (Leadless pacemaker) சிகிச்சையின் புதிய சாத்தியங்கள் ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் இடம் பெற்றன.

இந்த நிகழ்வின் போது,கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,தேசிய அளவிலான இருதய சிகிச்சையில் தங்கள் மருத்துவமனையை முன்னிலைக்குக் கொண்டு சென்றுள்ள முக்கிய மருத்துவச் சாதனைகளைப் பற்றி அறிவித்தார். ” சீரற்ற இருதய மேலறை துடிப்பு ( Atrial Fibrillation) சிகிச்சைக்கான ‘கிரையோஅப்லேஷன்’ முறையில் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்து கேஎம்சிஹெச் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நாடு முழுவதும் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்து முன்னணி மருத்துவமனைகளின் தனிச்சிறப்பு மிக்கப் பட்டியலில்

கேஎம்சிஹெச்-ம் இணைந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ‘கிரையோஅப்லேஷன்’ தொழில்நுட்பத்தை வழங்கி, இந்த அளவிலான வெற்றியைப் பெற்ற ஒரே மருத்துவமனை கேஎம்சிஹெச் மட்டுமே.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கேஎம்சிஹெச் மருத்துவமனை ‘Ensite X EP System with Omni polar Technology (OT)’ என்ற புதிய இருதய 3D மேப்பிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், மருத்துவர்கள் அசாதாரண இதய துடிப்புப் பிரச்சனைகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவுகிறது” என்று கூறினார்.

சேலத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து கேஎம்சிஹெச் நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் என் பழனிசாமி வலியுறுத்திக் கூறினார்: “வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிக்கலான மருத்துவ முறைகளைப் பற்றி விவாதிக்கவும், இருதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜியின் எதிர்காலத்தை ஆராயவும் ஒரு சிறந்த களமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2-வது மாநாட்டை சேலத்தில் நடத்தியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்”.

கேஎம்சிஹெச்-இன் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் டாக்டர் எம். லாரன்ஸ் ஜேசுராஜ் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ஹைதராபாத் ஏஐஜிமருத்துவமனையின் டாக்டர் சி. நரசிம்மன், கொச்சி லிசி மருத்துவமனையின் டாக்டர் ஜாபிர் அப்துல்லாகுட்டி, திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரதிருநாள் நிறுவனத்தின் பேராசிரியர் கே.கே. நாராயணன் நம்பூதிரி, தானே ஜூபிடர் மருத்துவமனையின் டாக்டர் ஆஷிஷ் நாபர் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் எம். கதிரேசன் உள்ளிட்ட முன்னணி மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இருதய துடிப்பு கோளாறுகள் உள்ள நோயாளிகளைப் பராமரிப்பதில் கேஎம்சிஹெச் எப்போதும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ‘கார்டியாக் பேசிங் எலக்ட்ரோபிசியாலஜி’ என்ற தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சீரற்ற இருதய மேலறை துடிப்பு சிகிச்சைக்கான சிறப்பு மையத்தை ( Center of Excellence for Atrial Fibrillation) கேஎம்சிஹெச் அறிமுகப்படுத்தியது. இருதய துடிப்பு கோளாறு மேலாண்மைக்காக அதிநவீன கிரையோஅப்லேஷன் (Cryoablation) முறையை கேஎம்சிஹெச் பெற்றுள்ளது. மிக மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான முறையான இந்த சிகிச்சையைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் வழங்கியதும் கேஎம்சிஹெச் மருத்துவமனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க