• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேஎம்சிஹெச் அவசரகால மருத்துவத் துறை சார்பாக விபத்து சிகிச்சை குறித்த கருத்தரங்கம் (AMTEC-2026)

April 25, 2026 தண்டோரா குழு

உலகத் தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் தனிப்பட்ட கவனத்துடன் செயல்பட்டுவரும் கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது அவசர கால மருத்துவத் துறை சார்பாக, “அவசரகால சூழ்நிலைகளில் காயங்களுக்கான தீவிர சிகிச்சை” (AMTEC 2026) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பை ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தனது மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் விபத்து மற்றும் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் இது இறப்பு மற்றும் உடல்நல பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

முறையான மற்றும் ஆதாரபூர்வமான விபத்து சிகிச்சைக்கான தேவையை உணர்ந்து, ‘லெவல் 1’ விபத்து சிகிச்சை மையமான கேஎம்சிஹெச், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஒரு மணி நேரத்திற்குள் (Golden Hour) அவசர கால சிகிச்சையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியது.

இந்த கருத்தரங்கில் நிபுணர்களின் உரைகள், மாதிரிப் பயிற்சிகள் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் சுவாச மேலாண்மை, அதிர்ச்சி சிகிச்சை, மூளை காயம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான அவசர சிகிச்சை, எலும்பு முறிவு காயங்கள் மற்றும் நவீன விபத்து கால உயிர் காக்கும் சிகிச்சைகள் (ATLS) குறித்து விளக்கப்பட்டது. மேலும், EFAST, ECMO, சென்ட்ரல் லைன் பொருத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை சுவாச நுட்பங்கள் போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இடம் பெற்றன.

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றுகையில் சிறந்த வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் கேஎம்சிஹெச் மருத்துவமனை மேற்கு தமிழகத்தில் விபத்துக்கால சிகிச்சையில் முதல்நிலை மையமாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ இயக்குனர் டாக்டர் ஏ. என். முருகன் மற்றும் அவசரகால மருத்துவத் துறையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மருத்துவர் K .திலீபன் மற்றும் மருத்துவர் K.தாரகராம் கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அவர்கள் பாராட்டினார்.

இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிபுணர்கள், ஆலோசகர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க