• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேஎம்சிஎச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

April 9, 2026 தண்டோரா குழு

சமூக நலன் மற்றும் நோய் தடுப்பு சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கேஎம்சிஎச் சூலூர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நேற்று கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒரு விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

காலை 9:30 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்வில் மாணவர்கள்,பேராசிரியர்கள்
மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டின் உலகளாவிய
சுகாதார முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடினர்.

கேஎம்சிஎச் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.
பழனிசாமி,பொது நலனில் மருத்துவமனையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி கூறுகையில்,

தரமான மருத்துவ சேவை என்பது மருத்துவமனை வளாகத்தோடு
நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார தினம் நினைவூட்டுகிறது என்றார்.

கேஎம்சிஎச் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கையெழுத்து இயக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். உறுதிமொழிச் சுவரில் கையெழுத்திட்ட அவர், பொது சுகாதாரத்தைப் பேணுவதில் தனிநபரின் பொறுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான தூதுவர்களாக இளைஞர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கேஎம்சிஎச் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் மனோஜ்,அதிகரித்து வரும் வாழ்க்கை
முறை நோய்கள் மற்றும் அவற்றைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து
உரையாற்றினார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.

மேலும் படிக்க