• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரிக்கெட் ஒருநாள் ஆட்ட அணியின் தலைவரானார் விராட் கோலி

January 6, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் “டி 20” போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் வெள்ளியன்று கூடிய 5 உறுப்பினர்களைக் கொண்ட பிசிசிஐ தேர்வுக்குழு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் “டி 20” தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டி மற்றும் “டி 20” கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) கடந்த புதனன்று அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் “டி 20” கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட இருந்தது.

இந்நிலையில், தோனி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடி முடிவை எடுத்தார். இதையடுத்து தற்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகித்து வரும் விராட் கோலி, இனி ஒருநாள் மற்றும் “டி 20” போட்டிகளின் கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என தேர்வுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), ராகுல், ஷிகர் தவண், மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், யுவ்ராஜ் சிங், ரஹானே, பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா, பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

“டி 20” போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், ராகுல், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ரிஷப், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, சஹால், மனிஷ் பாண்டே, பூம்ரா, புவனேஸ்வர் குமார், நெஹ்ரா.

மேலும் படிக்க