• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் – கர்நாடக முதல்வர்

November 24, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளன தனியார் பேருந்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் பகுதியில் உள்ள கால்வாய் மீது உள்ள பாலத்தில் இன்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் நிறுத்த முயற்சித்தும் அது முடியவில்லை.இதை தொடர்ந்து பாலத்திலிருந்து பேருந்து ஆற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் பேருந்து முழுவதுமாக நீரில் மூழ்கியது. பயணிகள் வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது இதனால் பலி எண்ணிகை உயரும் என அஞ்சப்படுகிறது, சம்பவ இடத்தில் அரசு அதிகாரிகள், மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முலமைச்சர் குமாரசாமி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் பின்னர் அப்பகுதியை பார்வையிட்ட அதிகாரிகளிடம் விபத்து குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார், பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், மேலும் விபத்து குறித்து காவல் துறை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க