• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலுக்கு சீமான் நேரில் வாழ்த்து

February 20, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசனை  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார். இதையடுத்து,அவர் திமுக தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நல்லகண்ணு ஆகியோரை சந்தித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இல்லத்துக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாளை தொடங்கவுள்ள  கமலின் அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் தெரிவித்தார்.சுமார் 20 நிமிட சந்திப்பிற்கு பிறகு, நடிகர் கமல்ஹாசனும், சீமானும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சீமான்,

நடிகர் கமல்ஹாசன் என்னை சந்திக்க விரும்பினார். ஆனால் பண்பாடு கருதி மூத்தவரான அவரை நான் வந்து சந்தித்தேன்.மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு  பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய கொள்கைகள் சீமானுக்கு தெரியாது என்றும், சமூக மாற்றங்கள் ஏற்படாத காரணத்தால், தாங்கள் அரசியலுக்கு வருவதாகவும் கூறினார்.அ.தி.மு.க அரசை கடுமையாக எதிர்த்து வருவதால் அக்கட்சி நிர்வாகிகளை தான் சந்திக்கவில்லை என்றும் கமல் தெரிவித்தார்.

 மேலும் ரஜினியும் கமலும் இணைந்தால்கூட 10 சதவீத வாக்குகள் வாங்க மாட்டார்கள் என்ற ராமதாஸ் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், தங்களுக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்.

மேலும் படிக்க