• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்கிய லைப்ரே அறக்கட்டளை

July 27, 2023 தண்டோரா குழு

லைப்ரே பவுண்டேஷன் சார்பில் ஏழை மாணவர்களின் கல்விக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவையை மையமாக வைத்து லைப்ரே என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கு தேவையான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நவஇந்தியா பகுதியில் உள்ள லைப்ரே அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் லைப்ரே அமைப்பின் இயக்குனர் பாபி பாலச்சந்திரன், ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ஸ்வாதி ஆகியோர் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் லைப்ரே அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், நிதி உதவி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க