• Download mobile app
16 Mar 2026, MondayEdition - 3687
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உச்ச நீதிமன்ற வளாகத்தில் காவலர் தற்கொலை

January 2, 2017 தண்டோரா குழு

புதுதில்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் காவல் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

நீதிமன்ற பாதுகாப்பு குழுவை சேர்ந்த சாண்டல் பாதுகாப்பிற்காக அவரிடம் இருந்த ஆயுதத்தை பயன்படுத்தி திங்கள்கிழமை காலை 8:15 மணியளவில் தற்கொலை செய்துக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் 2014 முதல் நீதிமன்ற பாதுகாப்பு குழுவில் பணியாற்றி வந்தார். அவருடைய பணியின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆகும். அவருடைய மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து குற்றம் மற்றும் தடவியல் குழு சோதனை செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்க என்ன காரணம் என்று அவருடைய குடும்பத்தினர், உறவினர், மற்றும் அவருடன் பணியாற்றியவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க