• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக இணைப்பு பேச்சு வார்த்தைக் குழு கலைக்கப் படுவதற்கு ரஜினியே காரணம்– மா.பா பாண்டியராஜன்

June 13, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக வெளியான செய்திகளே இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுவதற்கு காரணம் என மா.பா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அதிமுக இரு அணிகளும் இணைவதற்காக இரு சார்பிலும் பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக OPS அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

திருவேற்காடு கூட்டத்தில் எங்களது அணிக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தங்கள் அணியின் பலத்தை நிரூபிப்போம். இதற்காக தொண்டர்களை முழு வீச்சில் ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எங்களது அணியின் பலத்தினை நிச்சயம் உலகறியச் செய்வோம் என்றார்.

மேலும், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்பால் தொண்டர்கள் ஈர்க்கப்படுவதை தடுக்கவே அதிமுக அணி இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டதாக பாண்டியராஜன் கூறினார்.

மேலும் படிக்க