• Download mobile app
27 May 2026, WednesdayEdition - 3759
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுபாளையத்தில் பணியின் போது உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

May 12, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இன்று காலை ரோந்து பணியினை மேற்கொண்டு வந்த அவர், சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சக காவல்துறையினர் விளையாடி கொண்டிருக்கும் மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களுடன் சற்று நேரம் விளையாடி விட்டு அங்கு அமர்ந்துபேசி கொண்டு இருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது உள்ளது.

உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க