• Download mobile app
14 May 2026, ThursdayEdition - 3746
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 30, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். செயலாளார் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்,பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.

முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டதற்கு சிறப்பு செய்யப்பட்டது. சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து காணொளி படம் திரையிடப்பட்டது.இறுதியில் துணை முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க