• Download mobile app
05 Jul 2026, SundayEdition - 3798
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கோவை கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி 100% தேர்ச்சி – மாணாக்கர்கள் சாதனை

May 13, 2026 தண்டோரா குழு

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 100% மாணவர்கள் தேர்ச்சிபெற்று கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி’ (The Camford International School) சாதனை படைத்துள்ளது.

மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி, ஆசிரியர்களின் அயராத உழைப்பு மற்றும் பெற்றோர்களின் தொடர் ஆதரவு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே இந்தச் சாதனை அமைந்துள்ளது.

பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர்கள்
விவரம் வருமாறு:

500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று எம்.மீனாட்சிப்பிரியா முதலிடம் பெற்றுள்ளார்.பி.பிரணிகா 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் டி.மானஸ் 478 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளனர்.

இப்பள்ளியில் ஆங்கிலத்தில் இந்திரநீல் பி. மேனன், கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் பி.பிரணிகா, இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ் (Informatics Practices) பாடத்தில் எம்.மீனாட்சிபிரியா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

தொடர் கடின உழைப்பு,ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி சாதனை படைத்த மாணாக்கர்களை கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மேலும்,மாணாக்கர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளுக்குத் தங்கள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மாணவர்கள் கல்விசார் சிறப்பை எய்துவதற்குத் தங்கள் உறுதியான வழிகாட்டுதலையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் தொடர் ஆதரவளித்த பெற்றோருக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.

மேலும் படிக்க