• Download mobile app
18 Aug 2026, TuesdayEdition - 3842
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் கோவை ஆட்சியரிடம் மனு

May 13, 2026 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சங்க தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தின் நிறுவனர் தலைவர் பிரசன்ன மணிகண்டன்,

“முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசியல் பிரிவு அலுவலராக ரிக்கி ராதன் வெற்றிவேல் பண்டிட் அவர்களை நியமித்திருப்பது அவரது திறமை மற்றும் நீண்டகால அரசியல் பயணத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பொறுப்பாகும்.“ஒருவர் ஜோதிடர் என்பதற்காக அவரது நியமனத்தை அறிவியலுக்கு எதிரானது என சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஜோதிடம் என்பது வான் சாஸ்திரம், கணிதம் மற்றும் நாள்காட்டி முறைகளை அடிப்படையாகக் கொண்ட கலை. தமிழகத்தில் பல லட்சம் ஜோதிடர்கள் மக்களின் அன்றாட வாழ்வில் நம்பிக்கையூட்டும் வழிகாட்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய ஜோதிடக் கலையை இழிவுபடுத்துவது ஒட்டுமொத்த ஜோதிட சமூகத்தையும் அவமதிப்பதாகும் என்றும், அரசியல் விமர்சனங்களின் பெயரில் மத நம்பிக்கைகள் மற்றும் தொழில்களை புண்படுத்தும் வகையில் பேசுவது அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது.

மேலும்,வன்னியரசு தனது பேச்சுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்க நிர்வாகக் குழு கூடி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க