• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் விஜய் வலியுறுத்தல்

May 13, 2026 தண்டோரா குழு

மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வு அறிமுகமான காலம் முதலே தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசுகளே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு காரணமாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, சமூகநீதி மற்றும் சம வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க