• Download mobile app
05 Apr 2026, SundayEdition - 3707
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பாக போராட்டம்

June 30, 2022 தண்டோரா குழு

கோவையில் சமூக ஆர்வலர் தீஸ்தா, டெல்லியை சேர்ந்த ஊடகவியாளர் சுபையர் மற்றும் ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ்.ஆகியோரை கைது செய்ததை கண்டித்து கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

குஜராத் கலவரம் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்,ஸ்ரீகுமார் ஐ.ஏ.எஸ் ஊடகவியலாளர் சுபைர் ஆகியோரை கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள,பி.எஸ்.என்.எல் . அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SDPI கட்சியின் கோவை மாவட்ட தலைவர் மூஸ்தபா தலைமையில் நடைபெற்ற,இதில் மாவட்ட பொதுச்செயலாளர் A.A. அப்துல் காதர் , மாவட்ட பொருளாளர் முகம்மது இக்பால் , மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் , மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக், ஷானவாஸ் , ஏ.ஜே. உசேன் , வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் , தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன போராட்டத்தில் பேசுகையி்ல்,

காந்திநகர் குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும்,தொடர்ந்து இது போன்று அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.இது போன்று சமூக ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்கற் கைது நடவடிக்கைகளால் அடக்கு முறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க