• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆர். எஸ். புரத்தில் ஆர்ட்டிஸ் ஸ்கின் அண்டு ஹேர் கிளினிக் திறப்பு

January 28, 2023 தண்டோரா குழு

ஆர்ட்டிஸ் ஸ்கின் அண்டு ஹேர் கிளினிக் நவீன உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தோல் மற்றும் உடலுக்கான மேம்பட்ட அழகு சிகிச்சைகளை வழங்குவதில் தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

மேலை நாடுகளில் உபயோகிக்கப்படும் அமெரிக்க நிறுவனமான எஃப்டிஎ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நவீன உபகரணங்களையும் அழகு சாதனங்களையும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.இங்கு மிகவும் தேர்ச்சி பெற்ற தோல் துறை நிபுணர்களும் அழகுத் துறை வல்லுநர்களும் தோல் மற்றும் கேசத்தை அழகு படுத்தும் சிகிச்சைகளை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் அளிக்கிறார்கள்.
அழகியல் துறையில் உலகில் ஏற்படும் பற்பல முன்னேற்றங்களை மக்களுக்கு ஏற்ற வகையில் அளிப்பதில் இந்நிறுவுனம் பெருமை கொள்கிறது. ஆர்ட்டிஸ் தற்போது கோவை ஆர்.எஸ். புரம், டிபி ரோட்டில் அரவிந்த் டவர்ஸ் தனது புதிய மையத்தை துவக்கி உள்ளது. இங்கு அனைத்து சிகிச்சைகளும் தக்க மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் வழங்கப்படுகிறது. இதன் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது.

விழாவில் பேசிய ஆர்ட்டிஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர்,

வேகமாக வளர்ந்து வரும் கோவை மாநகரத்தில் மக்கள் அனைத்து துறையிலும் உயர்ந்த தரத்தை எதிர் பார்க்கிறார்கள். இங்கு அழகியல் துறையில் சிறந்து விளங்கும் ஆர்ட்டிஸ் நிறுவனத்தின் புதிய மையத்தில் ஒரே கட்டிடத்தில் பற்பல நவீன அழகு சிகிச்சைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது என்றார்.

இம்மையத்தை சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவியான டாக்டர் வினு அறம் அவர்கள் துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில்,

இன்று பற்பல மக்களும் விரும்பி செய்து கொள்ளும் அழகு சிகிச்சைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் ஆர்ட்டிஸ் மையம் வழங்குவது பாராட்டத்தக்கது என்றார்.
மைத்தின் துவக்க விழா சலுகையாக, 10.02.2023 வரை இலவச ஆலோசனை வழங்கப்படும். மேலும் சிகிச்சைகளுக்கு 15 சதம் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும் படிக்க