• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபிஷ் பகேராஸ்

September 11, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

சிங்காரா மீன் அல்லது கெளுத்தி மீன் – 500 கிராம்
கடலை மாவு – 5 டேபிள் ஸ்பூன்
கெட்டியான தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
சோடா பானம் – 1/2 பாட்டில்
ஆரஞ்சு கலர் பொடி – தேவைக்கேற்ப
லெமன் – 2
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா-1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும். பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம். அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.

மேலும் படிக்க