• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“துள்ளுவதோ இளமை படம் ஓடவில்லை என்றால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம் – தனுஷ்

December 18, 2018 தண்டோரா குழு

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய தனுஷ்,

‘மாரி 2’ திரைப்படம் இண்டெர்நேஷனல் படம். மிகப் பெரிய திரைப்படம் அப்படி எதுவும் கிடையாது. மாரி 2 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு மாரி 3 எடுப்போம். இந்த படத்தை சர்வதேச அளவில் எடுத்துள்ளோம், மக்களுக்கு தேவையான மெசேஜ் உள்ளது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். குழந்தைகள் பார்த்து மகிழ்கிற படம். இந்தப் படத்தில் நடிகை சாய்பல்லவிதான் நங்கூரம். மாரி 2 திரைப்படம் பக்கா குடும்ப, கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். மாரி 2 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு மாரி 3 எடுப்போம். இந்த படத்தை சர்வதேச அளவில் எடுத்துள்ளோம், மக்களுக்கு தேவையான மெசேஜ் உள்ளது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இதில் காதல், காமெடி, நல்ல கதை, வில்லன் எல்லாம் உண்டு. எனக்கு வடசென்னை படத்தை விட மாரி படத்தில் நடிப்பது தான் சவாலாக இருந்தது.

மாரியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. சில பேர் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. 20 வருடங்களாக எதிரிலே இருக்கும் இசையமைப்பாளரின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது. ஆனால் யுவன் அப்படியே இருக்கிறார். அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. “துள்ளுவதோ இளமை படம் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் செல்வராகனும், யுவனும் தான் நெருக்கமானவர்கள். முகம் தெரியாத புதுமுகங்களை வைத்து துள்ளுவதோ இளமை எடுக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு அடையாளம் கொடுத்தது யுவன்சங்கர் ராஜா தான். அந்தப் படம் வெற்றியடையாமல் இருந்திருந்தால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் அப்போது இருந்தோம். அவருடைய இசைக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். செல்வராகவன் எப்படி எனக்கு நடிப்பில் அஸ்திவாரமோ ‘துள்ளுவதோ இளமை’ மற்றும் ‘காதல் கொண்டேன்’ படங்கள் மிகப்பெரிய வெற்றியடைய யுவன்சங்கர் ராஜா இசைதான் காரணம். அந்த ஓர் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்ததில் யுவன்சங்கர் ராஜாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

மேலும், தம்பி சிவகார்த்திகேயன், நண்பர் சேது(விஜய் சேதுபதி) ஆகியோரது படங்கள் மாரி 2 படத்துடன் திரைக்கு வருகிறது. ஐந்து திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வருவது ஆரோக்கியமானது கிடையாது. இருந்தாலும் அவரவர் தேவைக்காக அந்தத் தேதிகளில் படம் வெளிவருவது அவர்களது நோக்கம். ரொம்பவே கடினமான விஷயம்தான். 5 படங்களும் பெரிய படங்கள்தான். எல்லோருக்கும் லாபம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க