• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீசில் புகார்

May 23, 2017 தண்டோரா குழு

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாதவரம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் காமெடி நடிகர் பாலாஜி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடுவராக இருந்து வருகிறார். இருவருக்கும் நித்யா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனாது. இவர்களுக்கு போர்ஷிகா(6), என்ற பெண் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாகவ இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்துள்ளது. பிரபல ‘டிவி’யின் நடன நிகழ்ச்சியிலும் இது வெளிப்பட்டது. எனினும் அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார். அதில், தன் கணவர் தன் சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசி, தன்னை கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க