• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாம் அவருடைய சீடர்கள் – சிவாஜியை புகழ்ந்து தள்ளிய அமிதாப்பச்சன்

April 4, 2019 தண்டோரா குழு

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருக்கிறார். தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தையும் தயாரித்துள்ளார். எனினும் இவர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நடித்து கிடையாது.

ரஜினிகாந்த், சூர்யா, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், ஷங்கர் உள்பட பலர் கேட்டும் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்காமல் இருந்த அமிதாப் பச்சன்.தற்போது ஒரு தமிழில் சினிமாவில் நடித்து வருகிறார். ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘உயர்ந்த மனிதன்’. இந்த படத்தின் கதாநாயகனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் எஸ்.ஜே.சூர்யா அவ்வப்போது அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு எஸ்.ஜே.சூர்யா.

“என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் இது. நான் ஒருபோதும் காணாத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. அதைப் பகிர்ந்த ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் நன்றி” கூறியிருந்தார்.இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஒரு சிறிய வீட்டின் சுவற்றில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவாஜியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தின் கீழ் அமிதாப்பச்சனும், எஸ்.ஜே.சூர்யாவும் நிற்பது போல் அந்த புகைப்படம் இருக்கிறது.

அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

குருவின் நிழலில் இரண்டு சீடர்கள் நானும், சூர்யாவும். சிவாஜி தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு அடையாளம். அவருடைய புகைப்படம் இந்த சுவற்றை அலங்கரிக்கிறது. நான் மரியாதையுடன் அவர் காலை தொட்டேன் என்றார். அவர் மாஸ்டர்… நாம் அவருடைய சீடர்கள்’ என்று தமிழில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க