• Download mobile app
19 May 2026, TuesdayEdition - 3751
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல 60 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது ! – படத்தின் தலைப்பு அறிவிப்பு

October 18, 2019 தண்டோரா குழு

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் நடிகர் அஜித். கதையை கேட்ட போனிகபூர் இந்த படத்தையும் தானே தயாரிப்பதாக அறிவித்தார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில்,இப்படத்தின் பூஜை தொடங்கும் என அறிவித்திருந்தது போலவே இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அப்போது இப்படத்திற்கு ‘வலிமை’ என பெயரிட்டு படக்குழுவினர் பூஜையை முடித்துள்ளனர் இந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கூடுதல் தகவல் விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க