• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

January 3, 2019 தண்டோரா குழு

இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் பேட்ட படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள விஸ்வாசம் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், விஸ்வாசம் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம், உலகம் முழுவதும் ஜன.10-ம் வெளியீடு என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தினத்தில் தான் ரஜினியின் பேட்ட படமும் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க