• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலையில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை!

November 23, 2018 தண்டோரா குழு

சபரிமலையில் பிறப்பிக்க பட்டு இருந்த 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு நாடுமுழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருமுறை கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.எனினும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன்,சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.இதனால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.குறிப்பாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.இதற்கிடையில்,கோவில் மண்டல பூஜை,மகர விளக்கு பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு. வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

இதனிடையே,சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக,ஆர்எஸ்எஸ் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதையடுத்து,சபரிமலை,நிலக்கல்,பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தடையை நீட்டிக்க கேரள காவல்துறையினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி. நுவா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க