• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது – முதல்வர் பழனிசாமி

October 27, 2018 தண்டோரா குழு

கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,

“20 தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்,தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.துரோகம் இழைத்தவர்களுக்கு 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு மூலம் சரியான பாடம் கிடைத்துள்ளது.கெட்டவர்களுக்கும்,துரோகிகளுக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடம் புகட்டியுள்ளது.முல்லைப்பெரியாரில் அணைக்கட்ட கேரள அரசுக்கு,மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.புதிய அணை கட்ட தமிழக அரசு தயாராக உள்ளது,மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆனைமலையாறு,இடைமலையாறு திட்டங்களை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.மீனவர்களின் நலன் காக்கிற அரசு அதிமுக அரசு.மீனவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் மீனவர்கள் தாக்கப்படக்கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டது,இனி ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க