• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்

October 17, 2018 தண்டோரா குழு

சபரிமலை கோவில் பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என போராட்டக்காரர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை) மாலை திறக்கப்படுகிறது.22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும்.இதனால் பெண்களின் வருகை அதிக ளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து,இன்று மாலை 5:00 மணிக்கு நடைதிறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலீஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது.

ஆனால்,பாதுகாப்பிற்காக வந்த பெண் போலீஸாரை தேவசம் போர்டு போலீஸார்கள் சபரிமலைக்குள் அனுமதிக்காததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதுதையடுத்து,சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில்,நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள்,அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுகின்றனர்.இதனால்,அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள கோவிலுக்குச் செல்லும் பெண் பக்தர்கள் காலில் விழ்ந்து கோவிலுக்கு செல்ல வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டகாரர்களால் சன்னிதானத்துக்கு செல்ல முடியாமல் தவித்த ஒரு பெண்ணை போலீஸார் மீட்டு பாதுகாப்பாக கோயிலுக்கு அழைத்து சென்றனர்.அதைபோல் பெண் டாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர்.அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மேலும் படிக்க