October 16, 2018 
தண்டோரா குழு
                                மும்பையில் மாடல்அழகியை  கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து வீசிய 19 வயதுநபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்சித் (20). மாடலிங் ஆசையில் மும்பையில் தங்கி இருந்தார். இதற்கிடையில் திங்களன்று மும்பை மேற்கு புறநகர்ப்பகுதியான மலாத்தில் சூட்கேசில் மான்சியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மான்சியின் ஆண் நண்பரான முஸமில் சையத் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அந்தேரியில் வசித்து வந்தார்.
விசாரணையில் குற்றத்தை சையத் ஒப்புக் கொண்டார், ஆனால் கொலை செய்யும் நோக்கமில்லை, வாக்குவாதம் முற்ற ஸ்டூலால் தாக்கியதில் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.சம்பவத்தன்று  அந்தேரி பகுதியில் உள்ள சையத் வீட்டிற்கு சென்ற மான்சிக்கும் சையதிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில்,கம்பியால் தாக்கியும் கழுத்தை நெரித்தும் மான்சியை சையது கொலை செய்துள்ளார். பின்னர் மான்சியின் உடலை சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் சூட்கேசை வீசி விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார். இதனை கார் ஓட்டுநர் கவனிக்க அவருக்கு கடும் சந்தேகம் எழுந்துள்ளது, போலீஸாருக்குத் தகவல் அனுப்பினார். போலீஸார் வந்து சூட்கேசைக் கைப்பற்றி, கொலையை உறுதி செய்ததோடு, சிசிடிவி காமிராப் பதிவுகளையும் கார் ஓட்டுநரின் உதவியுடனும் சையத்தைக் கைது செய்தனர். வழக்கிப் பதிவு செய்து கொலைக்கு வேறு காரணங்கள் உண்டா, பின்னணியில் யார் என்று துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.