September 28, 2018
தண்டோரா குழு
இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு மும்பையில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்(52).முன்னாள் Heavyweight சாம்பியனான இவர் பல சர்ச்சைகளுக்கும்,சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.இந்நிலையில்,மும்பையில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை துவங்கி வைப்பதற்காக மைக் டைசன் முதல் முறையாக இன்று இந்தியா வந்துள்ளார்.
இதையடுத்து,மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கூடிய ஏராளமான ரசிர்கள்,மைக் டைசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.