• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளதாகஅறிவிப்பு

September 18, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளதாக சட்டமன்றச் செயலர் அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் கடந்த மாதம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். இதனால் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளதாக சட்டமன்றச் செயலர் பூபதி அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்துக்கு 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.இதுமட்டுமின்றி தமிழக அரசின் இணையதளத்திலும் 18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க