• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

July 26, 2017 தண்டோரா குழு

உலகில் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும் பிரிட்டன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலக நாடுகளில் அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் வாழும் நாடுகள் குறித்த ஆய்வை, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்த் பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் அமெரிக்கா முதல் இடத்திலும் பிரிட்டன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் 80 சதவீத பெண்களுக்கு அதிக உடல் பருமன் உண்டு என்றும் பிரிட்டனில் 77.2 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்சனையை உண்டு என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் நீரிழிவு நோய், புற்று நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், பித்தப்பை நோய், நுரையீரல் நோய், இருதய நோய் மற்றும் ஆரம்பகால மரணம் ஆகியவை ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்று தெரிய வந்துள்ளது.

மேலும்,பிரிட்டனில் இருக்கும் அதிக உடல் பருமன் கொண்ட இளம் பெண்கள் 51.4 சதவிகிதமும் அமெரிக்காவின் அதிக உடல் பருமன் கொண்ட இளம் பெண்கள் 51.9 சதவிகிதம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க