• Download mobile app
28 May 2026, ThursdayEdition - 3760
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக சிறைத்துறைக்கு புதிய டி.ஐ.ஜி. நியமனம்

July 18, 2017 தண்டோரா குழு

கர்நாடக சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ்.அதிகாரி ரேவண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அதற்காக உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் சிறைதுறை டிஐஜி ரூபா உள்துறை, சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். இதற்கிடையில், நேற்று டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ்.அதிகாரி ரேவண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் பெங்களூரு மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளர் பணியையும் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க