• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்டர்சிட்டி விரைவு ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு

July 15, 2017 தண்டோரா குழு

திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிடையேயான பகல் நேர ரயிலாக இயக்கப்பட்டு வந்த திருச்சி – நெல்லை இன்டா்சிட்டி ரயிலை,நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வரை நீட்டித்து கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்டா்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பதற்கான தொடக்கவிழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட இண்டர்சிட்டி ரெயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க