• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை – உயர்நீதிமன்றம்

July 10, 2017 தண்டோரா குழு

தனியார் பால் கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் மே24 ம் தேதி தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் கலப்படம் இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்திருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஹட்சன் , டோட்லா, விஜய் பால் போன்ற தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். இதில் தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் எதும் கலக்கப்படவில்லை என்றும், உரிய ஆதாரங்களின்றி அமைச்சர் தனியார் நிறுவன பால் குறித்து பேச தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரமின்றி அமைச்சர் விமர்சிக்ககூடாது என்று உத்தரவிட்டது.

மேலும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க