• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வைஃபை வசதி

July 8, 2017 தண்டோரா குழு

அரசுப்பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் வைஃபை வசதி அமைக்கபடும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

விஜயபாஸ்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :

படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

கழிப்பறை வசதி கொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

அரசு பேருந்துகளில் படிப்படியாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்:

பேட்டரி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்.

அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்துகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

மேலும் படிக்க