• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

July 7, 2017 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மீது தனியார் கல்லூரி மாணவர்கள் தாக்குதல், காயத்துடன் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ஈச்சனார் அருகே வரும் போது எதிரே சென்ற பயணிகள் ஆட்டோவை முந்தி சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து அங்கிருந்து சென்றமாணவர்கள் கல்லூரிக்கு சென்று சில மாணவர்களை அழைத்து வந்து கல்லூரிவாசலில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த மோகன்ராஜை கம்பி மற்றும் ஹெமெட்டுகளை கொண்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதை தடுக்க சென்ற சில ஆட்டோ ஓட்டுநர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை போலீஸார் தாக்குதல் நடத்திவிட்டு கல்லூரிக்குள் மறைந்திருந்த மாணவர்கள் இரண்டுபேரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக ஆட்டோ ஓட்டுநர்கள் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க