• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு.

May 2, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து பல்வேறு கேள்விகளும், சர்ச்சைகளும் நிலவி வந்த நிலையில் குஜராத் பல்கலைக்கழகம் மோடி கல்வித் தகுதி குறித்த தகவலை வெளியிட்டது.

முதுகலை அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 62.3 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன படித்துள்ளார் அவரது கல்வி தகுதி என்ன ? என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை கேட்டுவந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்திடம் (சிஐசி) பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை வெளியிட கோரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில், மோடிக்கு எந்தக் கல்வி தகுதியும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள உரிமை உள்ளது எனவும், தகவல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட்டு இந்தத் தகவலை வெளியிட வேண்டும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி தற்போது, குஜராத் பல்கலைக்கழகம் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி கடந்த 1983-ஆம் ஆண்டு அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டத்தில் 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் எடுத்து 62.3 சதவீத தேர்ச்சியுடன் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், மோடியின் இளங்கலை பட்டம் குறித்த எந்தவித தகவலும் இல்லை என குஜராத் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் எம்.என்.பட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க