• Download mobile app
22 Apr 2026, WednesdayEdition - 3724
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீடிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

May 11, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீமைக்கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

தமிழக அரசு ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை தலைமை பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு சீமைக்கருவேல மரங்கள் பாதிப்பு குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் என்றும், இந்தக் குழுவில் வேளாண்பல்கலை பேராசிரியர், கால்நடை பல்கலை பேராசிரியர், சட்ட, வேளாண்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உறுப்பினராக உள்ளனர். மேலும் இந்த குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசு, நிபுணர்கள் குழு அமைத்தால், அந்த குழுவில் எங்கள் தரப்பில் 4 நிபுணர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,இந்த வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.அதுவரை, தமிழகத்தில் சீமை கருவேலம் மரத்தை அகற்ற விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க