November 15, 2026
தண்டோரா குழு
சி.டி.ஆர் – ஜே.கே டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026-ன் 2-வது சுற்றின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, காரி மோட்டார் ஸ்பீட்வே மைதானத்தில் பரபரப்பான முடிவுகள், கடைசி நேர முந்தல்கள் மற்றும் அபார வெற்றிகள் அரங்கேறின.
எல்.ஜி.பி பார்முலா 4 பிரிவில் ஆர்யா சிங்கை 0.175 வினாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உட்பட, இரண்டு வெற்றிகளைப் பெற்று துருவ் கோஸ்வாமி நட்சத்திர வீரராக ஜொலித்தார். அதேபோல், இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் அனிருதா அரவிந்த் தனது சக அணி வீரர் தீபக் ரவிகுமாரை நூலிழையில் வீழ்த்தினார். கபீர் சஹோச் மற்றும் பிரதீக் சோனாவனே ஆகியோரும் தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
எல்.ஜி.பி பார்முலா 4:மெக்கோ ரேசிங் வீரர் துருவ் கோஸ்வாமி இரட்டை வெற்றிகளைப் பதிவு செய்தார். முதல் பந்தயத்தில் ஆர்யா சிங்கைக் கடைசி லேப்பில் 0.175 வினாடிகள் வித்தியாசத்தில் முந்தி திரில் வெற்றி பெற்ற அவர், இரண்டாவது பந்தயத்தில் 5-வது இடத்திலிருந்து தொடங்கி 1.956 வினாடிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இரு பந்தயங்களிலும் சிங் இரண்டாவது இடத்தையும், ராகுல் ரங்கசாமி மற்றும் ஆதித்யா பட்நாயக் ஆகியோர் முறையே மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி கோப்பை:அமெச்சூர் பிரிவில் சௌரவ் சஞ்சய் டேவை வீழ்த்தி கபீர் சஹோச் தனது தொடர்ச்சியான 5-வது வெற்றியைப் பதிவு செய்தார். ப்ரோ பிரிவில் செந்தில் குமார் மற்றும் ஆல்வின் சேவியரை வீழ்த்தி அனிஷ் ஷெட்டி முதலிடம் பிடித்தார்.
இச்சுற்றுடன் நிறைவடைந்த 2026 சீசனில் அமெச்சூர் பிரிவில் கபீர் சஹோச்சும், புரொபஷனல் பிரிவில் செந்தில் குமாரும் சாம்பியன் பட்டம் வென்றனர்.ஜே.கே டயர் லெவிடாஸ் கோப்பைஜென்டில்மேன் பிரிவில் பிரதீக் சோனாவனே போல் பொசிஷனிலிருந்து தொடங்கி 9.586 வினாடிகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்தார். அஸ்வின் புகழகிரி மற்றும் பாலாஜி ராஜு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். ரூக்கி பிரிவில் கவீன் ராஜபக்சே முழுமையான ஆதிக்கம் செலுத்தி முதலிடம் பிடித்தார்.
சூப்பர் சலூன் பிரிவுகள்:
இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பிரிவில் அர்ஜுன் நரேந்திரன் இரண்டு பந்தயங்களிலும் அபார வெற்றி பெற்றார். இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவின் முதல் பந்தயத்தில் அமன் நாக்தேவும், இரண்டாவது பந்தயத்தில் பாலபிரசாத் ஏ-வும் வெற்றி பெற்றனர். இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் அனிருதா அரவிந்த், சக வீரர் தீபக் ரவிகுமாரை 0.307 வினாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சூப்பர் ஸ்டாக் பிரிவில் தில்ஜித் டி.எஸ் முதலிடம் பிடித்தார்.
எப்1300 நோவிஸ் கோப்பை:
டி.டி.எஸ் ரேசிங் வீரர் அகஸ்டின் பாபியுடன் நடந்த கடும் போட்டியில், கடைசி நேரத்தில் முந்திய மெக்கோ ரேசிங் வீரர் ஷத்வீர் ஷெட்டி 3.863 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாபி இரண்டாவது இடத்தையும், கெக் கியான் ஜுன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.இந்தச் சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது சுற்று டிசம்பர் 11 முதல் 13 வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற உள்ளது.