November 13, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி ஆடம்பர வாழ்வியல் தளமான டாடா க்ளிக் லக்சரி, ஜெய்ஸ் வாட்ச் ஸ்டோருடன் இணைந்து இரண்டாவது ‘லக்ஸ் வாட்ச் ஏலத்தை’ அறிவித்துள்ளது.
இந்த ஏலம் வரும் டிசம்பர் 4 முதல் 6 வரை 3 நாட்கள் ஆன்லைன் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களின் 100-க்கும் மேற்பட்ட மிகவும் விரும்பப்படும் உபயோகப்படுத்தப்பட்ட வாட்ச்கள் இடம்பெறும். வாட்ச் ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் இவற்றை கண்டறியவும் சொந்தமாக்கிக் கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். டாடா க்ளிக் லக்சரி செயலி மற்றும் இணையதளத்தில் உள்ள ஏல இணையதளம் மூலமாக இதற்கான முன்பதிவு மற்றும் ஏலம் நடைபெறும்.’தி லக்ஸ் வாட்ச் ஏலம்’ என்பது வாங்குபவர்களுக்கான கூடுதல் கட்டணம் இல்லாத பிரத்யேக வாட்ச் ஏலமாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய பழைய வாட்ச் நெட்வொர்க்கான ஜெய்ஸ் வாட்ச் ஸ்டோருடன் இணைந்து இது நடத்தப்படுகிறது. சாதாரண கடைகளில் எளிதில் கிடைக்காத, அதன் தோற்றம், அரிதான தன்மை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ச்களை வாடிக்கையாளர்கள் இதில் ஏலம் கேட்கலாம். டாடா க்ளிக் லக்சரியின் நம்பகத்தன்மை மற்றும் தர உத்தரவாதத்துடன் இந்த ஏலம் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஏலத்தில் ரோலக்ஸ், ப்ரெகெட், பிரைட்லிங், வாச்செரான் கான்ஸ்டான்டின் போன்ற முன்னணி நிறுவனங்களின் வாட்ச்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரோலக்ஸ் டேடோனா, ரோலக்ஸ் ஜிஎம்டி மாஸ்டர் II, ரோலக்ஸ் சப்மரைனர், ப்ரீட்லிங் நேவிடிமர், மற்றும் ப்ரெகுட் டைப் XX ஆகியவை இந்த ஏலத்தில் குறிப்பிடத்தக்க சில மாடல்கள் ஆகும்.
இந்த ஏலம் குறித்து டாடா க்ளிக் லக்சரியின் தலைமை செயல் அதிகாரி கோபால் அஸ்தானா கூறுகையில்,
“வாட்ச் ஆர்வலர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்கும், ஒரு வாட்ச் என்பது அதன் வடிவமைப்பை விட மேலானது; அதன் வேலைப்பாடு, பாரம்பரியம் மற்றும் அரிதான தன்மை ஆகியவை சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆன்லைன் வாட்ச் ஏலத்தை நடத்தும் முதல் இ-காமர்ஸ் தளம் டாடா க்ளிக் லக்சரி ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் லக்ஸ் வாட்ச் ஏலம் நாடு முழுவதிலும் உள்ள சேகரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பல புதிய வாடிக்கையாளர்களையும் கொண்டு வந்தது.
இந்த சிறப்பான வரவேற்பு மற்றும் தேவையைத் தொடர்ந்து, இந்த டிசம்பரில் இரண்டாவது லக்ஸ் வாட்ச் ஏலத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை குழந்தைகள் புற்றுநோய் பராமரிப்புக்கு ஜெய்ஸ் வாட்ச் ஸ்டோர் நன்கொடையாக வழங்கும். டாடா க்ளிக் லக்சரி தளத்தின் வழியாக அணுகக்கூடிய ஏல இணையதளம் மூலம் இந்த வாட்ச்களைப் பார்ப்பதற்கான முன்பதிவுகளைச் செய்யலாம்.
ஏலம் தொடர்பான பிரத்யேக உதவி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களை டாடா க்ளிக் லக்சரியின் உதவி விற்பனை குழுவுடன் இணைக்கும். முன்பதிவு, ஏலம் கேட்பது, பணம் செலுத்துதல் மற்றும் விற்பனைக்கு பிந்தைய ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த குழு உதவும்.ஏலம் தொடங்கும் போது முதல் ஏலக் கேட்பைப் பதிவு செய்வதற்கு முன், சரிபார்ப்பு செயல்முறை மற்றும் டோக்கன் கட்டணம் (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திரும்பப் பெறக்கூடியது) ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். பிரத்யேக ஏல தளத்தின் மூலம் ஏலம் கேட்கலாம்.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்பான பேமெண்ட் லிங்க் அனுப்பப்படும். அவர்கள் 4 நாட்களுக்குள் பரிவர்த்தனையை முடிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ச் பாதுகாப்பாக அவர்களின் வீட்டு வாசலுக்கே டெலிவரி செய்யப்படும்.