• Download mobile app
01 Oct 2026, ThursdayEdition - 3886
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகளாவிய பிரீமியம் டயர் சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்த , சியட் சென்னை ஆலையின் திறன் விரிவாக்கம்

October 1, 2026 தண்டோரா குழு

சியட் லிமிடெட் நிறுவனம், தனது சென்னை ஆலையில் பயணிகள் கார் மற்றும் எஸ்யூவி, வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன டயர் பிரிவுகளுக்கான உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது.

இந்த விரிவாக்கம்,இந்திய வாடிக்கையாளர்களுக்கும் ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளுக்கும் மேம்பட்ட, பிரீமியம் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆலையின் திறனை வலுப்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள 163 ஏக்கர் பரப்பளவிலான இந்த சென்னை ஆலை, தன் உற்பத்தி நடவடிக்கைகளில் இணைக்கப்பட்ட இயந்திரங்கள், நிகழ்நேர தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.

உலகளவில் “லைட்ஹவுஸ்” அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் நான்கு டயர் தொழிற்சாலைகளில் ஒன்றாகவும், சியட் -ன் இரண்டாவது தொழிற்சாலையாகவும் இவ்வாலை திகழ்கிறது. மேலும், தன் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக பிரிட்டிஷ் சேஃப்டி கவுன்சிலின் 5-ஸ்டார் விருது மற்றும் ‘ஸ்வார்ட் ஆஃப் ஆனர்’ விருதையும் இது பெற்றுள்ளது.இந்த ஆலை 25% பசுமைப் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 9எம்டபிள்யூ கூரை சூரியமின் சக்தி கட்டமைப்பு உட்பட, தனது கணிசமான ஆற்றல் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலமாகவே பெறுகிறது. மேலும் இது பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்ற வசதி கொண்ட ஆலையாகும்.

பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த உற்பத்தித் திறன், சியட் -ன் உற்பத்தி நடவடிக்கைகளில் சென்னை ஆலையின் பங்கினை வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படக்கூடிய பிரீமியம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளின் தேர்வை அதிகரிக்கிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய தயாரிப்புகளில் ‘4 சீசன் டிரைவ்+’ ஒன்றாகும். இது மாறுபட்ட வானிலை சூழல்களுக்கு ஏற்ப செயல்படும் வகையில், குறிப்பாக ஈரமான சாலைகளில் சிறந்த பிடிமானத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ஐரோப்பிய தரத்திலான ‘ஆல் சீசன்’ (அனைத்து பருவமழை) டயர் திறனை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

மேலும், இந்த ஆலை சியட் -ன் ‘கிராஸ் டிரைவ் ஆர்டி’ ரக டயர்களையும் உற்பத்தி செய்கிறது. இது அமெரிக்காவின் கரடுமுரடான மற்றும் ஆஃப்-ரோட் டயர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கரடுமுரடான பாதைக்கான டயர் ஆகும். சியட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அர்னாப் பானர்ஜி கூறுகையில், “இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் சியட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சென்னை உற்பத்தி ஆலை ஒரு முக்கியமான அங்கமாகும்.

இந்த விரிவாக்கப்பட்ட உற்பத்தித் திறன், பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் முழுவதும் மேம்பட்ட நவீன தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவுவதோடு, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா போன்ற சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும் வழிவகுக்கிறது. இந்த முதலீடு, இந்தியாவில் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் மூலம் பிரீமியம் பிரிவுகளில் போட்டியிடும் நமது திறனை மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க