October 1, 2026
தண்டோரா குழு
இண்டஸ்இண்ட் வங்கி தனது கிரெடிட் கார்டுகளுக்கான விளம்பரங்களை சாட்ஜிபிடியில் வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், புதிய டிஜிட்டல் தளங்களில் தனது சேவையை விரிவுபடுத்துவதோடு, மக்கள் தங்களது தயாரிப்புகளை எளிதாக அறிந்துகொள்ள புதிய வழியையும் வங்கி உருவாக்கியுள்ளது.
தகவல்களையும் புதிய தயாரிப்புகளையும் தேடுவதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் உரையாடல் தளங்களை மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொள்ள வங்கி இந்த புதிய தளத்தைப் பயன்படுத்துகிறது.புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வங்கியின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்தும் மக்களிடம், வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எளிதாகக் கொண்டு சேர்க்க சாட்ஜிபிடியில் விளம்பரம் செய்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.மக்கள் தகவல்களைப் பெறும் முறையில் ஏஐ தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண இணையத் தேடல்களை விட, உரையாடல் மூலமாக தகவல்களைப் பெறுவதையே மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர்.
இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்ட இண்டஸ்இண்ட் வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, புதிய தளங்களின் மூலம் சிறந்த நிதிச் சேவைகளை வழங்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.