• Download mobile app
16 Aug 2026, SundayEdition - 3840
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மோதூர் பசுமைத் திட்டம் தொடக்கம்: 1,000 மரக்கன்றுகள் நடவு

August 16, 2026 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள “மோதூர் பசுமைத் திட்டம்” தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திட்டத்தை சிஎஸ்ஐ பேராயர் பிரின்ஸ் கால்வின் கல்வெட்டைத் திறந்து வைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய பேராயர் பிரின்ஸ் கால்வின், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குறிப்பாக, வேளாண் காடுகள் (Agro Forestry) மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், நிலத்தின் வளத்தையும் மேம்படுத்த முடியும் என்றார். எதிர்கால தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மோதூர் பசுமைத் திட்டத்தின் முதற்கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டமும் நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்திரு ஸ்டீபன் எபினேசர், அருட்திரு சாந்தகுமார், அருட்திரு ஆபிரகாம், ஆலயச் செயலாளர் ஜெ.ஏ. பரமானந்தம், பொருளாளர் அருண் ஆனந்தராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடம் அப்பாதுரை, ஒருங்கிணைப்பாளர் காட்வின் கோயில், திட்டப் பொறுப்பாளர்கள் ஸ்ரீனிவாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு மற்றும் நிலையான வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மோதூர் பசுமைத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பல்வேறு பசுமை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க