August 5, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் ஒரே எல்பிஎம்ஏ அங்கீகாரம் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனமான எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனம் ‘விராசாத்’ என்ற 10 கிராம் நினைவு தங்க நாணயத்தை புதுடெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் ஓட்டலில் வெளியிட்டது.
இது முழுவதும் 999.9+ தூய்மையான மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தால் தயாரிக்கப்பட்டது.ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் மூன்று முறை தங்கம் வென்ற சாம்பியன் மீராபாய் சானு இந்த நாணயத்தை வெளியிட்டார். இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காகவும், பல கோடி இந்தியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்த சிறப்பு நினைவு நாணயத்தை அவரே முதல் நபராகப் பெற்றுக் கொண்டார்.
காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற வரலாற்றை மீராபாய் சானு சமீபத்தில் படைத்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான அவருக்கு இந்த முதல் ‘விராசாத்’ நாணயத்தை வழங்குவதன் மூலம், இந்நிறுவனம் நாட்டின் சாதனைகளுக்கு மட்டுமின்றி, உலக அளவில் இந்தியாவின் புகழை தொடர்ந்து உயர்த்தி வரும் தனிநபர்களுக்கும் தனது மரியாதையை செலுத்துகிறது.
10 கிராம் எடையுள்ள 999.9+ தூய்மையான 24 கேரட் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தால் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனத்தின் தரச் சான்றிதழுடன் கூடிய மிகவும் பாதுகாப்பான கவரில் பேக் செய்யப்பட்டு உள்ளது.மொத்தம் 8 ஆயிரம் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நாணயங்கள் இந்நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசிய எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சமித் குஹா கூறுகையில்,
“இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், தனது விடாமுயற்சி, புதுமை மற்றும் சாதனைகள் மூலம் உலகிற்கு தொடர்ந்து உந்துசக்தியாக விளங்கும் நமது தேசத்திற்கு ‘விராசாத்’ நாணயம் ஒரு சமர்ப்பணமாகும். நவீன இந்தியாவின் அடையாளம் மற்றும் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலான பயணத்தைக் கொண்ட மீராபாய் சானுவுக்கு இந்த முதல் ‘விராசாத்’ நினைவு நாணயத்தை வழங்குவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
தங்கத்தை மறுசுழற்சி செய்வது போன்ற நிலைத்தன்மை வாய்ந்த நடைமுறைகள் மூலம் பொறுப்பான மற்றும் தற்சார்பு கொண்ட விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான கட்டமைப்பை உருவாக்க நாங்கள் எப்படி உறுதியாக உள்ளோமோ, அதேபோல மீராபாயின் விடாமுயற்சியும் தேசத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ‘விராசாத்’ மூலமாக இந்தியாவின் பெருமைமிகு கடந்த காலத்தை மட்டுமல்ல, அதன் எதிர்காலத்தை தொடர்ந்து கட்டமைத்து வரும் மக்களையும் நாங்கள் கொண்டாடுகிறோம்.” என்றார்.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும், பிரதமரின் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லவும் இந்திய அரசு எடுக்கும் பரந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் எம்எம்டிசி-பிஏஎம்பி நிறுவனத்தின் பொறுப்புணர்வையும் இது காட்டுகிறது.