• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்.எம்.டபிள்யூ டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி: 37 நாடுகளில் இருந்து 12,278 படங்கள்; ரூ.12 லட்சம் பரிசு வழங்கி கௌரவிப்பு

July 30, 2026 தண்டோரா குழு

எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 15-வது டி.ஜே. நினைவு சர்வதேச புகைப்படப் போட்டி – 2026-இன் வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 37 நாடுகளைச் சேர்ந்த 2,334 புகைப்படக் கலைஞர்கள் அனுப்பிய 12,278 புகைப்படங்கள் போட்டியில் இடம்பெற்றன.

எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி. ஜெயவர்த்தனவேலுவின் நினைவாக 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சர்வதேச போட்டி,உலகம் முழுவதும் உள்ள புகைப்படக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.2026-ஆம் ஆண்டுக்கான போட்டி வனவிலங்கு உருவப்படங்கள் (Wild Portraits), இயற்கைக் காட்சிகள் (Naturescape), வான்வழிப் பார்வை (Aerial View) ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. மே 1 முதல் ஜூன் 30 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை இந்தியாவின் ராகுல் சச்தேவ், கல்யாண் வர்மா மற்றும் கென்யாவின் அந்தோனி ஓச்சியெங் ஒன்யாங்கோ உள்ளிட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்தனர்.

விருது வழங்கும் விழா வியாழக்கிழமை கோவை கஸ்தூரி சீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.இதில் எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு,வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கி கௌரவித்தார்.

போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை பொதுமக்கள் பார்வைக்காக நடைபெறுகிறது.

வெற்றியாளர்கள் இயற்கைக் காட்சி (Naturescape):

முதல் பரிசு – இந்தியாவின் தினேஷ் இன்சைட் (Dinesh Insight) – Clay Apartments.

இரண்டாம் பரிசு – பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அர்னாட் ஃபாரே (Arnaud Farre) – Between Black and White.

வனவிலங்கு உருவப்படங்கள் (Wild Portraits):

முதல் பரிசு – இந்தியாவின் அனிருத் காமகெரி (Anirudh Kamakeri) – Early Morning Prayer.

இரண்டாம் பரிசு – இந்தியாவின் ஓங்கார் ரவீந்திர பெட்ரே (Onkar Ravindra Bedre) – Last of Us.

வான்வழிப் பார்வை (Aerial View):

முதல் பரிசு – இந்தியாவின் சச்சின் பரலி (Sachin Bharali) – The Sleeping Family.

இரண்டாம் பரிசு – ராமச்சந்திரன் கோவிந்தராஜ் (Ramachandiran Govindaraj) – The Last Waterhole.

இந்த போட்டியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதோடு, இயற்கை மற்றும் வனவிலங்குகளின் அழகை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக எல்.எம்.டபிள்யூ நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க