July 30, 2026
தண்டோரா குழு
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட ரெனாடஸ் குழுமத்தின் கட்டுமானப் பொருட்கள் நிறுவனமான ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட், தனது புதிய ரெனாஃபிளக்ஸ் (Renaflex) ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆந்திரப் பிரதேசம், நாயுடுப்பேட்டையில் ₹350 கோடி முதலீட்டில் உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ள ரெனாகான், இந்தியாவில் முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி (Laminar Flow Technology) மூலம் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் அதிக வலிமை, நீடித்த தன்மை, துல்லியமான பரிமாணம் மற்றும் தரத்தில் ஒரே மாதிரியான தயாரிப்புகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிமுக விழாவில் பேசிய ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி. செல்வசுந்தரம்,
“கோவையில் ரெனாஃபிளக்ஸ் அறிமுகம் என்பது முழுமையான கட்டுமானத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக வளர்வதற்கான முக்கிய மைல்கல்லாகும். கோவை போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் நகரங்களில், நவீன மற்றும் நிலையான கட்டுமானத் தேவைகளை பூர்த்தி செய்யும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவது எங்களின் நோக்கம்” என்றார்.
ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஏ.ஏ.சி. மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு உற்பத்தி மையமாக திகழும் நாயுடுப்பேட்டை தொழிற்சாலை, ஆண்டுக்கு 60,000 மெட்ரிக் டன் ஃபைபர் சிமெண்ட் போர்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். மேலும், இந்தத் தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெனாஃபிளக்ஸ் போர்டுகள் தீ எதிர்ப்பு, ஈரப்பத எதிர்ப்பு, கரையான் எதிர்ப்பு, நீண்ட ஆயுள், குறைந்த பராமரிப்பு, மென்மையான ஃபினிஷிங் மற்றும் வேகமான நிறுவல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை உள்பிரிவு சுவர்கள், போலி மேற்கூரைகள், முகப்பு அமைப்புகள், இடைத்தள தரைகள், மாடுலர் கட்டமைப்புகள், முன்தயாரிப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறையில் தயாரிக்கப்படும் இந்த போர்டுகள், IGBC மற்றும் GRIHA போன்ற பசுமைக் கட்டிடச் சான்றிதழ் தரநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற ஃபைபர் சிமெண்ட் போர்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ரெனாஃபிளக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. பின்னர் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘விஷன் 2047’ இலக்குகளுக்கு ஏற்ப, வேகமான, பாதுகாப்பான மற்றும் நிலையான கட்டுமானத் துறையின் வளர்ச்சியில் ரெனாஃபிளக்ஸ் முக்கிய பங்காற்றும் என ரெனாகான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.