• Download mobile app
01 Oct 2026, ThursdayEdition - 3886
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில், சென்னை மொபைல்ஸ் சார்பில் ஓப்போ ஸ்பீடு டெஸ்ட் 2026 கோலாகலமாக நடைபெற்றது

June 29, 2026 தண்டோரா குழு

சென்னை மொபைல்ஸ் வழங்கிய OPPO Speed Test 2026 நிகழ்ச்சி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப மற்றும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட லம்போர்கினி, ஆடி, ஜாகுவார், போர்ஷே உள்ளிட்ட உயர்ரக சொகுசு கார்கள், பல்வேறு வகையான விண்டேஜ் கார்கள், ரேஸ் கார்கள் மற்றும் சொகுசு பைக்குகள் பங்கேற்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டன.

ஒரே இடத்தில் தங்களது கனவு கார்களைப் பார்த்த இளைஞர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். மேலும், பந்தயப் பாதையில் சீறிப்பாய்ந்து சென்ற சொகுசு கார்கள் மற்றும் சாகசங்களில் ஈடுபட்ட விண்டேஜ் கார்கள் ஆகியவற்றைக் கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,ரேஸ் கார்களின் அனுபவத்தை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், அவர்களை கார்களில் அமர வைத்து தொழில்முறை ஓட்டுநர்கள் டிரிஃப்ட் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சியின் முதல் கட்டமாக நடைபெற்ற விழாவில் OPPO நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களான OPPO Find X Ultra மற்றும் OPPO Reno 16 அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சம்சு அலி ,நிறுவுனர் சென்னை மொபைல்ஸ் மற்றும் ஆதில் ,இணை நிர்வாக இயக்குனர், சென்னை மொபைல்ஸ், வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாமல்,அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்பதே சென்னை மொபைல்ஸின் நோக்கம். OPPO Speed Test 2026 அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.

புதிய மாடல்களின் கேமரா திறன், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், அதிவேக செயல்திறன் மற்றும் நவீன வடிவமைப்பு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. ஊடக பிரதிநிதிகள் புதிய சாதனங்களை நேரடியாகப் பயன்படுத்தி அனுபவிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க